அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. சிவபெருமான் சலந்திரன் என்னும் அசுரனை வதம் செய்த தலம். திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், வழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் ஆகியவை மற்ற வீரட்டத் தலங்கள்.
மூலவர் 'வீரட்டானேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், அழகிய லிங்க வடிவில், மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'ஏலவார் குழலி' மற்றும் 'பரிமளநாயகி' ஆகிய திருநாமங்களுடன் காட்சித் தருகின்றாள்.
சலந்திரனை வதம் செய்யும் உற்சவ மூர்த்தி சிலை உள்ளது. அவரது கையில் சக்கர வடிவம் உள்ளது.
கோயிலுக்குப் பின்புறம் மெய்ஞ்ஞானேஸ்வரர் கோயிலும், எதிரில் சக்கர தீர்த்தமும், அருகில் துளசி மாடமும் உள்ளது. அதனால் இத்தலம் 'பிருந்தை மயானம்' என்றும் அழைக்கப்படுகிறது. பிருந்தை - துளசி.
இத்தலத்து முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|